மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து 335 படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை இவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, மண்டபம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரின் படகை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்து அதில் இருந்த ஜான்தாஸ், அமோஸ்டின், பரலோக ஜெபஸ்டின் ஆன்ட்ரோஸ் ஆகிய மூன்று மீனவர்களை கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மூவரையும் இலங்கை காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வரும் ஜன. 7 வரை சிறையில் அடைத்தனர்.
