அவனியாபுரம்: வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு நல்ல எதிரி வேண்டும் என விஜய் பேசியுள்ளார். அந்த வலிமையான எதிரி யார் என்பதை அவரிடமே கேளுங்கள் என சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு நல்ல எதிரி வேண்டும். எல்லோரையும் எதிர்க்க முடியாது என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
அது சரிதான். அவர் ஒரு எதிரியை தீர்மானித்து வைத்திருக்கிறார். எங்களுக்கும் கோட்பாடு எதிரி இருக்கிறது. அந்த வலிமையான எதிரி யார் என்பதை விஜய்யிடம் கேளுங்கள். கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்கிறீர்கள். நான் 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறேன், எந்த கட்சி கூட்டணியும் எனக்கு தேவையில்லை’’ என்றார்.
