மாநகர பஸ்சில் பணப்பை டிக்கெட் மிஷின் திருட்டு

வேளச்சேரி: வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் டிக்கெட் மிஷின், பணத்தை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர். பள்ளிக்கரணை ம.பொ.சி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (41). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வேளச்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு (தடம் எண்.51) பேருந்தை ஓட்டிச்சென்றார். கண்டக்டராக ஜோதி (44) என்பவர் பணியாற்றினார்.

இவர்கள், வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் மதியம் ஒரு மணி அளவில் பேருந்தை நிறுத்திவிட்டு, டிக்கெட் கொடுக்கும் மிஷின், வசூல் பணம் ஆகியவற்றை ஒரு சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு அருகில் உள்ள கடையில் டீ குடிக்க சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்த போது, டிக்கெட் மிஷின், பணப்பை திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து புகாரின்படி, வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: