நிதிச்சுமை ஏற்பட்டாலும் நிறைய பலன்கள் உண்டு மகளிர் உரிமைத்தொகையை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது: சிவகங்கையில் ப.சிதம்பரம் பாராட்டு

சிவகங்கை: தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையால் ஏராளமான பலன்கள் உள்ளன. உலகமே இதனை ஏற்றுக் கொண்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்த குழு தமிழக முதல்வரை சந்தித்துள்ளது. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அனைத்தும் படிப்படியாக நடைபெறும். மகளிர் உரிமைத்தொகையால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். ஆனால் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதால் ஏராளமான பலன்கள் உள்ளன. அதை சீர் தூக்கி பார்க்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பல மாநிலங்கள் மகளிர் உரிமைத்தொகையை வெவ்வேறு பெயரில் வழங்கி வருகின்றன. உலகம் முழுவதும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவின்போது கிறிஸ்தவ குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுள்ளார். இதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? இவ்வாறு கூறினார்.

Related Stories: