சென்னை :தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை ரூ.880, மாலை ரூ.800 என ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,800க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.210 உயர்ந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிராம் வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.31 உயர்ந்து ரூ.285க்கு விற்பனையாகிறது.
