டெல்லி : 100 நாள் வேலை திட்டத்தை தகர்த்தது மூலம் ஏழைகளின் முதுகில் குத்திவிட்டது மோடி அரசு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “ஏழைகளின் வயிற்றில் அடித்துக் கொண்டிருந்த மோடி அரசு, தற்போது அவர்களது முதுகில் குத்தி விட்டது. ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் வறுமையில் இருந்து ஏழை மக்கள் மீண்டுள்ளனர். விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் குறித்து மாநிலங்களிடமோ அல்லது அரசியல் கட்சிகளுடனோ விவாதிக்கவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
