ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 12 முதல் புதிய நடைமுறை!!

சென்னை: ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 12 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாளில் ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஏற்கனவே தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமாக்கிய நிலையில் வழக்கமான முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாகிறது. முறைகேடுகளை தடுக்க, ஆதார் அட்டை இணைப்பை, ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இடைத்தரகர்கள் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்வதை தடுக்க ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய நடைமுறை டிச.29ம் தேதி தொடங்கி படிப்படியாக அமல்படுத்தப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

உண்மையான பயணிகள் மட்டும் முதல் நாளில் டிக்கெட் முன்பதிவு செய்வதை உறுதிசெய்யும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும். டிக்கெட் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை காட்டி டிக்கெட் பெறலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் முறைகேடுகளை தடுக்க ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பது அமலில் இருக்கிறது. இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை ரயில்வே வாரியம் கொண்டுவந்துள்ளது.

Related Stories: