துபாய்:ஏமனில் தாங்கள் கைப்பற்றிய மாகாணங்களை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஏமன் பிரிவினைவாதிகளின் படைகளுக்கு சவுதி அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் ஹத்ரமவுத் மாகாணத்தில் சவுதி அரேபியா நேற்று வான்வழித்தாக்குதல் நடத்திதாக தெற்கு இடைக்கால கவுன்சில் அறிவித்தள்ளது. இந்த தாக்குதலில் எத்தனைப்பேர் காயமடைந்தனர் என்பது குறித்த உடனடி தகவல்கள் இல்லை.
கவுன்சிலான தாக்குதல்கள் குறித்த செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு சவுதி விமானங்களே காரணம் என்றும் ஒருவர் அதில் புகார் தெரிவிக்கிறார். ஆனால் இந்த தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு சவுதி அரேபியா அதிகாரிகள் உடனடியாக பதில் அளிக்கவில்லை.
