×

விஜய் ஹசாரே கோப்பை ரோகித், கோலி அணிகள் வெற்றி: தமிழ்நாடு அணி தோல்வி

மும்பை: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை, உத்தரகாண்ட் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்ைப அணியில், கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மா, டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அடுத்து இறங்கிய முசீர் கான் 55 ரன், சர்பராஸ் கான் 55 ரன், ஹர்திக் தாமோர் 93 ரன், சாம்ஸ் முலானி 48 ரன் அடிக்க அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய உத்தரகாண்ட் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க மும்பை அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி – குஜராத் அணிகள் மோதின. கடந்த போட்டியில் அசத்திய விராட் கோலி இந்த ஆட்டத்திலும் 61 பந்தில் 13 போர் ஒரு சிக்சுடன் 77 ரன்கள் குவித்து அசத்தினர். கேப்டன் பண்ட் தனது பங்கிற்கு 79 ரன் எடுக்க அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய குஜராத் அணி இறுதிவரை போராடியும் 47.4 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக டெல்லி அணி 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு அணி மத்திய பிரதேசத்திற்கு எதிராக 49.3 ஓவரில் 280 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய மத்திய பிரதேச அணி 49.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : Vijay Hazare Trophy ,Rohit ,Kohli ,Tamil Nadu ,Mumbai ,Uttarakhand ,Rohit Sharma ,Musir ,
× RELATED இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி