மார்பிங் செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் ஏஐ படங்களால் அதிர்ச்சி: உடனே நீக்க ஐகோர்ட் உத்தரவு

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்து இணைய தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி அத்வைத் சேத்னாவின் விடுமுறைக் கால பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,’இது மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும், வருந்தத்தக்கதாகவும் உள்ளது. எனவே ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஷில்பாவின் மார்பிங் படங்கள், குரல் பதிவுகளை நீக்க வேண்டும். இவ்வாறு சித்தரிப்பது அவரது நற்பெயரையும் புகழையும் கெடுக்கும். இதை அனுமதிக்க முடியாது’ என உத்தரவிட்டார்.

Related Stories: