அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம் 31ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்றவர்கள், விருப்ப மனுக்களை சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் 15.12.2025 முதல் 23.12.2025 வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், நிர்வாகிகள், தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, வருகிற 28ம் தேதி (ஞாயிறு) முதல் 31.12.2025 (புதன்கிழமை) வரை தலைமை கழகத்தில் படிவங்களை வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுக விருப்ப மனு ரூ.15,000க்கும், புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு ரூ.5000க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை அதிமுக சார்பில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட சுமார் 10 ஆயிரம் பேர் வரை விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: