மதுரை : சிவகங்கையில் உள்ள பிள்ளையார்பட்டி கோயில் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள் ரூ.1.76 கோடி முறைகேடு செய்ததாக தொடர்பான வழக்கில் விசாரணை ஆணையம் அமைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களை முன்னாள் அறங்காவலர்கள் விற்பனை செய்துள்ளனரா என விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
