×

மைசூரு அரண்மனை அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

மைசூரு: கர்நாடகாவில் பிரபல சுற்றுலா தலமான மைசூரு அரண்மனை அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இரவு 8 மணி அளவில் அரண்மனையின் ஜெயமார்த்தண்டா நுழைவாயில் அருகே பலூனில் நிரப்ப வைத்திருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், பலூன் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார். ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இந்த சம்பவத்தால் அரண்மனையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

Tags : Mysore Palace ,Mysore ,Karnataka ,Christmas ,Jayamarthanda ,
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்