டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், தீபு சந்திர தாஸ் எனும் இந்து இளைஞர்கள் வன்முறை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் ராஜ்பாரி நகரத்தின் பாங்ஷா உபஜிலாவில் நடந்ததாக தி டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அடித்துக் கொல்லப்பட்டவர் அமிர்த மண்டல். இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பலரை மிரட்டி பணம் பறிக்கும் குற்ற செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு வீட்டில் இருந்தவர்களை மிரட்டி பணம் பறித்த போது உள்ளூர் மக்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த அமிர்த மண்டல் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
