விஜயகாந்த் குருபூஜை அழைப்பிதழை எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தோம்: எல்.கே.சுதீஷ் பேட்டி

 

சென்னை: விஜயகாந்த் குருபூஜை அழைப்பிதழை எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தோம் என எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு குருபூஜை டிச.28ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி சந்தித்து பேசினர். அப்போது குருபூஜையில் பங்கேற்க தேமுதிக சார்பில் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு குருபூஜையையொட்டி அழைப்பிதழை மட்டும் கொடுத்தோம். இதேபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் எங்களுடைய அழைப்பிதழை கொடுக்க உள்ளோம். அழைப்பிதழ் மட்டுமே கொடுத்தோம்; அரசியல் குறித்து பேசவில்லை என்று கூறினார்.

Related Stories: