- ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம்
- புது தில்லி
- முஸ்லிம்கள்
- தில்லி
- ஜாமியா மில்லியா இஸ்லாமியா (
- ஜே.எம்.ஐ) பல்கலைக்கழகம்
- ஜேஎம்ஐ பல்கலைக்கழகம்
- யூனியன் அரசு
புதுடெல்லி: டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பல்கலைக்கழகத்தின் வினா தாளில், முஸ்லிம்களுக்கு எதிரான கேள்வி இடம் பெற்றது. அதை தயாரித்த பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருப்பது ஜேஎம்ஐ பல்கலைக்கழகமாகும். சிறுபான்மை அந்தஸ்து பெற்ற இந்த பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவர்களுக்கு பருவ தேர்வு நடைபெற்று வருகிறது. பி.ஏ. ஹானர்ஸ் சமூகப்பணி பிரிவின் ஒரு கேள்வி தாளில், 15 மதிப்பெண்ணுக்கான ஒரு கேள்வியும் இடம் பெற்றிருந்தது. அதில், ’பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் இந்தியாவில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை பற்றி விவரிக்கவும்’ என கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி பாடங்களுக்கு எந்த வகையில் தொடர்புடையது என சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுந்தன.
இதையடுத்து, அந்த கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் வீரேந்திர பாலாஜி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பல்கலைக்கழகம் ஒரு விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. அக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை, பேராசிரியர் பாலாஜியின் இடைநீக்கம் தொடரும் எனவும் ஜேஎம்ஐ பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவை குறிப்பிட்டு, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகரான கஞ்சன் குப்தாவும், எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதன்பிறகு, இந்த விவகாரம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
