×

மாநகர் திமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை கோ.தளபதி எம்எல்ஏ அணிவித்தார்

மதுரை, டிச. 25: தந்தை பெரியார் 52வது நினைவு தினம், தமிழ்நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மாநகர் மாவட்ட திமுக சார்பில், அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு  மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்கள் பொன் முத்துராமலிங்கம், பெ.குழந்தைவேலு,

மாநில தணிக்கை குழு உறுப்பினர் வ.வேலுசாமி, தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன், மாவட்ட நிர்வாகிகள் ஒச்சுபாலு, மூவேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து கணேசன், ஏ.கே.ஆறுமுகம், பகுதி செயலாளர் அறிவுநதி, திமுக நிர்வாகிகள் காவேரி சொக்கலிங்கம், வழக்கறிஞர் ஜவஹர், தொமுச கருணாநிதி, கௌதம் காவேரிமணியம், முத்துமோகன் உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்றனர்.

 

Tags : Metropolitan DMK ,Go. Thalapathy MLA ,Periyar ,Madurai ,Tamil Nadu ,Metropolitan District DMK ,District Secretary ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்