×

மாநகராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

ஈரோடு,டிச.25: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (25ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். ஆணையர் அர்பித்ஜெயின், துணை ஆணையர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மாநகராட்சி அனைத்து நிலை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாநகராட்சி வளாகத்தில் சிறிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

 

Tags : Equality Christmas Festival ,Erode ,Erode Municipality Office ,Christmas ,Erode Municipal Office ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்