×

பொன்னமராவதியில் சமூக சேவகர்கள் 4 பேருக்கு விருது

பொன்னமராவதி, டிச. 25: பொன்னமராவதி பகுதியை சேர்ந்த 4 பேரூக்கு சிவாஜிகணேசன் விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை சார்பில் அவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் நகரப்பட்டி தொழிலதிபர் நடராஜன், பொன்னமராவதி டாக்டர் பூபதிமுகேஷ், காரையூர் காவல்நிலைய தலைமை காவலர் சார்லஸ்,

கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முருகேசன், சமூக சேவகர் புவனேஷ்வரி ஆகியோருக்கு, அவர்களின் சமூக சேவையினை பாராட்டி சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களுக்கு பொன்னமராவதி பகுதியை சேர்ந்த அரசியல் கட்டியினர், சமூக சேவை அமைப்பினர், பொதுமக்கள் பாராட்டினர்.

 

Tags : Ponnamaravathi ,Pudukkottai ,Thilakam ,Sivaji Ganesan Social Welfare Committee ,Nagarapatti ,Natarajan ,Dr. ,Bhoopathimukesh ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்