டொரண்டோ: கனடாவின் டொரண்டோ நகரைச் சேர்ந்த 30 வயது இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா கடந்த வெள்ளியன்று மாயமானார். இந்நிலையில், குடியிருப்பு ஒன்றில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை மீட்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கில் சந்தேக நபராக கருதப்படும் டொரண்டோவை சேர்ந்த அப்துல் கபூரிக்கு எதிராக போலீசார் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளனர்.
