டெல்லி: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மனிதகுலம் தழைக்க மண்ணுலகில் இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் உலகமெங்கும் சாந்தியும் ,சமாதானமும் நிலைக்கட்டும். அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை விதைத்து பலமடங்கு அன்பை அறுவடை செய்வோம். அனைவரது வாழ்விலும் நலமும். வளமும் சிறக்கட்டும். அனைத்து நண்பர்களுக்கும் இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்
