×

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4ஆகிய தேதிகளில் 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் படிவம் 6 பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் ஆட்சேபனை தெரிவிக்க படிவம் 7-ஐ சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு முகாம்களை சீராக நடத்தவும், திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தோனியின் தலைமைப் பண்பு எனக்கு மிகவும்...