ஸ்ரீவைகுண்டம் விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி வன்கொடுமை நீதிமன்றம் தீர்ப்பு..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயி ஆறுமுகராஜாவை வெட்டிக் கொன்ற வழக்கில் 4 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வன்கொடுமை செய்ததாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் 4 பேரும் வெட்டிக் கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. ஆறுமுகராஜாவை கொன்ற வழக்கில் இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், காசி ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேருக்கும் 3 ஆயுள் தண்டனையுடன் ரூ.29,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Related Stories: