×

நள்ளிரவில் பணியாளர்கள் பீதி: பண்ணாரி அம்மன் கோயிலில் நடமாடிய சிறுத்தை

 

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இக்கோயில் வளாகத்தில் அவ்வப்போது யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மதில் சுவர் மீது ஒரு சிறுத்தை நேற்று நள்ளிரவில் நடமாடியது.

இதை கண்டு பீதியடைந்த கோயில் பணியாளர்கள், வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் மதில் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை, மெதுவாக எழுந்து சுவர் மீது நடந்து சென்று வனப்பகுதிக்குள் தாவி குதித்து ஓடி மறைந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags : Bannari Amman temple ,Sathyamangalam ,Bannari Mariamman Temple ,Sathyamangalam Tiger Reserve forest ,Erode district ,
× RELATED அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி...