ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தொடர்பாக பரிந்துரை செய்ய அரசு குழு அமைப்பு!!

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. நிதி நிறுவனங்கள் துறை கூடுதல் இயக்குநர், கூட்டுறவுத்துறை துணைச்செயலாளர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருத்தியமைக்கப்படும் ஊதிய பரிந்துரையில் முரண்பாடு ஏற்படாத வகையில் அறிக்கை தர அரசு ஆணையிட்டுள்ளது.

Related Stories: