விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் 36 பந்துகளில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 84 பந்துகளில் 15 சிக்சர்கள், 16 பவுண்டரிகள் விளாசி 190 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி எடுத்துள்ளார். அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பீகார் அணியில் விளையாடி வருகிறார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமை சூர்யவன்ஷி பெற்றார். இதே அருணாச்சல் அணிக்கு எதிராக 2024ல் நடந்த போட்டியில் பஞ்சாப் வீரர் அன்மோல் சிங் 35 பந்துகளில் சதம் அடித்தார். ஏற்கனவே 2025 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக 38 பந்துகளுக்கு சூர்யவன்ஷி சதம் விளாசினார்.
