ஆகாஷ்-NG ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி: இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

டெல்லி: ஆகாஷ்-NG ஏவுகணை அமைப்பின் சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது இந்திய ஆயுதப் படைகளில் இந்த அமைப்பைச் சேர்ப்பதற்கு வழிவகுத்துள்ளது. இந்த அமைப்பு, அதிவேக, குறைந்த உயர மற்றும் நீண்ட தூர அதிக உயர இலக்குகள் உட்பட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக அதிக துல்லியத்தை வெளிப்படுத்தியது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட RF சீக்கர், இரட்டை-துடிப்பு திட ராக்கெட் எஞ்சின் மற்றும் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராடார்கள் மற்றும் C2 அமைப்புகளுடன் கூடிய ஆகாஷ்-NG, இந்தியாவின் வான் பாதுகாப்புத் திறனுக்கு ஒரு பெரிய உந்துதலை அளிக்கிறது என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடனான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆகாஷ் மற்றும் பிரமோஸ் ஏவுகணைகள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

Related Stories: