×

ஊட்டி இல்லை.. தென்னிந்தியாவிலேயே நேற்று அதிக குளிர் மிகுந்த மலை பிரதேசமாக குன்னூர் விளங்கியது : தமிழ்நாடு வெதர்மேன் ஜில்ஜில் அப்டேட்!

உதகை : கடும் குளிரில் நேற்று உதகையை மிஞ்சியது குன்னூர். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக 6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. உதகை நகரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக நேற்று 8.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாகவும் தென்னிந்தியாவிலேயே நேற்று அதிக குளிர் மிகுந்த மலை பிரதேசமாக குன்னூர் விளங்கியது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”தென்னிந்திய தீபகற்ப பகுதியில் ஊட்டியை பின்னுக்கு தள்ளி மிகவும் குளிர்ந்த மலை பிரதேசமாக குன்னூர் மாறியிருக்கிறது. அதுமட்டுமின்றி அடுத்த சில நாட்களுக்கு குளிர்ச்சியான நாட்கள் நீடிக்கும். வெப்பநிலையில் முன்னேற்றம் இருக்காது.

KTCC எனப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் நாளன்று அங்கும் இங்கும் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதிகபட்சமாக சாலைகள் நனைந்து ஈரமாக இருக்கும். மற்றபடி பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. அதுமட்டுமின்றி லேசான மழை கூட வாய்ப்புகள் இருக்கிறதே, கட்டாயம் பெய்துவிடும் என்று சொல்லிவிட முடியாது.

டிசம்பர் 23ம் தேதி நிலவரப்படி மிகவும் குளிர்ச்சியான மலைப் பிரதேசம் எது என்று பட்டியலிட்டால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் முதலிடத்தை பிடிக்கிறது. இங்கு 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதையடுத்து கர்நாடகா மாநிலம் ஹாசன் 7.9 டிகிரி, வால்பாறை 8.3 டிகிரி, ஊட்டி 8.4, ஏற்காடு 9.0, ஆந்திர மாநிலம் அரக்கு 9.4, கொடைக்கானல் 9.8, கேரளா மாநிலம் வயநாடு 11.1 எனப் பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் உட்புற மாவட்டங்களை எடுத்து கொண்டால் ஈரோடு முதல் திருத்தணி வரை பல இடங்களில் 17 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. தாளவாடியில் 12.4, தேன்கனிக்கோட்டை 13.3, பழனி 13.4, சூளகிரி 14.1, திண்டுக்கல் 14.1, பொள்ளாச்சி 14.3, தொண்டாமுத்தூர் 14.8, ரெட்டியாச்சத்திரம் 14.8, கிருஷ்ணகிரி 15.0, ஒட்டன்சத்திரம் 15.1, நத்தம் 15.4, கோவை, 15.7, குன்னத்தூர், கோவை 16.0 என வெப்பநிலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடலோர தமிழகத்தின் பல இடங்களில் 20 டிகிரிக்கும் குறைவாகவே வெப்பம் பதிவாகியுள்ளது. எண்ணூர் 19.5, தூத்துக்குடி 19.6, புதுச்சேரி 20.1, சோழிங்கநல்லூர் 20.3, கடலூர் 20.4, அதிராமபட்டினம் 20.4, கும்மிடிப்பூண்டி 20.5, கேளம்பாக்கம் 20.7 எனப் பதிவாகியுள்ளது. இதுதவிர தென்னிந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் ஹைதராபாத் 12.7, பெங்களூரு AP 14.4, பெங்களூரு 15.2, சென்னை AP 20.2, சென்னை 21 என குறைந்த வெப்பம் பதிவாகி உள்ளது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Coonoor ,South India ,Tamil Nadu ,Udacity ,
× RELATED வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது...