டெல்லி : இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் என்றும் இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
