ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தெற்கு வாணி வீதி பகுதியில் கேணிக்கரை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா சிக்கியது. கஞ்சா பறிமுதல் தொடர்பாக வேதாளையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 பேரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
