கொடைக்கானல், டிச.24: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கொடைக்கானலில் வான் உயர மரங்களில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள், தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர விடுதியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக மின்விளக்குகளால் அலங்கரிங்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் மின்விளக்கு அலங்கரிப்புகள் அமைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயங்களில் வான் உயரத்தில் மரங்களில் ராட்சத நட்சத்திரங்கள் அமைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் தேவாலயங்கள் மற்றும் தனியார் நட்சத்திர விடுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வண்ணங்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளை பார்க்கும் போது மலைகளின் இளவரசி மின்னொளியில் ஜொலிப்பது போன்று பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
