அரியலூர்,டிச.24: என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்று ஜி.கே.வாசன் சூசமாக அழைப்பு விடுத்துள்ளார். அரியலூரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய பாஜ, மாநிலத்தில் அதிமுக தலைமை என தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எதிர் கொள்ளும் வகையில் என்.டி.ஏ கூட்டணி வலுபெறும். எதிர்மறை வாக்குகளை ஒன்றிணைக்கும் வகையில் என்டிஏ கூட்டணி இரண்டு மாதங்களில் முழு வடிவம் பெறும்.
தவெக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுமா? என நிருபர்கள் கேட்டதற்கு, கருத்துள்ள கட்சிகள் எங்களுடன் இணைந்தால் வெற்றி எளிது’ என்று, தவெக தலைவர் விஜய்க்கு சூசக அழைப்பு விடுக்கும் வகையில் தெரிவித்தார். மேலும், பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்து கேட்டதற்கு அதிமுக – பாஜக தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார்.
