- சமாஜ்வாடி
- டிஎஸ்பி
- அரியலூர்
- மாவட்ட எஸ்.பி.
- அரியலூர் உட்கோட்டா
- துணை கண்காணிப்பாளர்
- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
- விஷ்வேஷ்
- பா. சாஸ்திரி
அரியலூர் டிச.24: அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி வருடாந்திர ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, முகாம் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார். பொதுமக்களின் மனுக்கள் மீது பின்பற்றப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
