×

செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், டிச. 24: செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 26ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 26 ம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

 

Tags : Senthurai Tahsildar ,Ariyalur ,District Collector ,Rathinasamy ,Senthurai Talukdar ,
× RELATED வத்திராயிருப்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி