மகாராஷ்டிரா டிஜிபியாக என்ஐஏ தலைவர் நியமனம்?

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநில போலீஸ் கேடரைச் சேர்ந்த 1990ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சதானந்த் வசந்த் தாதே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை உள்ள நிலையில், தற்போது முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில காவல்துறை தலைமை இயக்குனராக தற்போது ரஷ்மி சுக்லா பதவி வகித்து வருகிறார்.

இவரது பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, மாநிலத்தின் அடுத்த டிஜிபியாக சதானந்த் வசந்த் தாதேவை நியமிக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டது. சதானந்த் தாதேவை மீண்டும் மாநிலப் பணிக்கு அனுப்புமாறு ஒன்றிய அரசிடம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: