- மத்திய புவியியல் துறை
- முல்லை பெரியார் அணை
- சென்னை
- தில்லி
- பிறகு நான்
- திண்டுக்கல்
- மதுரை
- ராமநாதபுரம்
- சிவகங்கை
சென்னை: தண்ணீரில் மறைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பகுதிகளை ரிமோட் கன்ட்ரோல் ஆப்ரேட்டிங் மூலம் டெல்லி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரமாகவும், கால்நிலைகளின் வாழ்வாதாரம் இருப்பது முல்லைப் பெரியாறு அணையாகும். முல்லைப் பெரியாறு அணை சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையில் 152க்கு தண்ணீர் தேகக்கொள்ளும் அளவுக்கு கட்டப்பட்டது. இந்த அணை தேக்கக்கூடிய தண்ணீர் அனைத்தும் தமிழகத்திற்கு முழு உரிமையுள்ளது. இந்த நிலையில் கடந்த 1978ஆண்டு அணை பலம் இழந்து விட்டது என்று குற்றச்சாட்டு கூறி கேரளா அரசு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்தது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி Remotely Operated Vehicles (ROVs) மூலம் ஆய்வு தொடங்கியது. நீருக்குள் உள்ள அணையின் கட்டுமானம் இதன் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. மிக நுண்ணிய அளவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக விவசாயிகள், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு இதே போல ஆய்வு நடத்தி அணை உறுதியாக இருப்பதாக அளிக்கப்பட்ட சான்றின் படி, அணையில் நீர் தேக்குவதை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
