×

ஒன்றிய அரசின் ‘சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்’ என்ற விருதை வென்ற MTCக்கு உலக வங்கி பாராட்டு!

சென்னை : ஒன்றிய அரசின் சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது. இதற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை மாநகரில் உள்ளூர் போக்குவரத்துக்கு பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என பெரும்பாலான சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. பல போக்குவரத்து சேவைகள் இருப்பினும், பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது அரசின் பேருந்து சேவையைதான். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து தினந்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த பேருந்துகளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் பயணிக்கின்றனர். இந்த நிலையில், ஒன்றிய அரசின் சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது. முந்தைய வீழ்ச்சியிலிருந்து மீண்டு, ஒன்றிய அரசின் சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருதை வென்று சாதனை படைத்துள்ள எம்.டி.சி.க்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள கட்டுரையில், “3 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையின் பயணிகள் பொதுப் பேருந்துகளைப் புறக்கணித்து வந்தனர். அப்போது, மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) குறைந்த பயணிகளின் எண்ணிக்கை, சிறிய பேருந்துத் தொகுதி மற்றும் பொது மக்களின் நம்பிக்கையின்மை போன்ற சவால்களால் தத்தளித்து வந்தது. இன்று, சென்னை இந்த நிலையை முற்றிலுமாக மாற்றிச் சாதனை புரிந்துள்ளது. மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரிடமிருந்து “சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” (City with the Best Public Transport System) என்ற இந்தியாவின் உயரிய நகர்ப்புறப் போக்குவரத்து விருதை வென்றுள்ளது. இது சென்னை பெருமை கொள்ளத்தக்க ஒரு அங்கீகாரம்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : World Bank ,MTC ,EU ,Chennai ,Chennai Municipal Transport Corporation ,Union Government ,Chennai Manar ,
× RELATED தமிழக மீனவர்களை விடுக்க தேவையான...