அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டனுக்கு அருகே ஏழு பேரை ஏற்றிச் சென்ற மெக்சிகோ கடற்படையின் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் பலத்த காயங்கள் உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், டெக்சாஸ் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்தவர்களில் நான்கு பேர் கடற்படை அதிகாரிகள், நான்கு பேர் பொதுமக்கள். அவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்று மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தில், கடந்த சில நாட்களாக மூடுபனி நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர் கேமரூன் பாடிஸ்ட் தெரிவித்துள்ளார். இதே போல் கடந்த வாரம் மெக்சிகோ நாட்டின், மத்திய மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: