நாகை: ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய வழக்கில் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றவர்களை தேசிய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு கைது செய்தது. வேளாங்கண்ணி கார் பார்க்கிங் பகுதியில் இருந்து போதைப் பொருளை கடத்தியபோது கையும் களவுமாக சிக்கினார்.
