- Patalur
- கலியமூர்த்தி
- சித்தனா கவுண்டர்
- தேரணி
- ஆலத்தூர் தாலுக்கா
- பெரம்பலூர் மாவட்டம்
- சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- சென்னை
- திருச்சி...
பாடாலூர், டிச.22: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தன கவுண்டர் மகன் கலியமூர்த்தி (60). இவர் நேற்று காலை அவருடைய பைக்கில் பாடாலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் கலியமூர்த்தி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன கலியமூர்த்திக்கு, ராமபிரபா என்கிற மனைவியும், சுகன்யா என்ற மகளும், கார்த்திக், நவீன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
