×

வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம்

சிவகங்கை,டிச.22: இளையான்குடி அருகே இளமனூரில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியேந்திரன் தலைமை வகித்தார். பாலகிருஷ்ணன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் சிறப்புரையாற்றினார்.சட்டமன்ற தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள், வாக்காளர்களை நீக்கியிருந்தால் மீண்டும் சேர்க்க செய்வது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு திமுக ஆட்சியின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் சுப.தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் சிவனேசன், மாவட்ட பிரதிநிதிகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

 

Tags : Sivaganga ,North Union DMK ,Ilamanoor ,Ilayankudi ,Former ,Panchayat ,President ,Sathiyandran ,Balakrishnan ,Nagarajan ,Manamadurai ,MLA ,Tamilarasi Ravikumar… ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு