கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 891 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்: 70,000 பேர் முன்பதிவு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 255 பேருந்துகளும், நாளை மறுநாள் 525 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் மொத்தம் 91 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் மாதாவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வாரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 21,206 பயணிகளும், வெள்ளிக்கிழமை 7,578 பயணிகளும், சனிக்கிழமை 5,972 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 14,256 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்கிறோம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து துறை தெரித்துள்ளது.

Related Stories: