தேர்தல் களத்துக்கே வராதவர் பேசலாமா? விஜய்யை பார்த்து சிரிச்சுட்டு போய்டணும்; காமெடி பீஸாக மாற்றிய சீமான்

திருச்சி: திருச்சியில் நேற்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது, ஏற்புடையது அல்ல. ஒரு கோடி பேர் நீக்கப்பட்டுள்ளது எப்படி திருத்தம் ஆகும். பிழை இருந்தால் அதை மட்டும் நீக்க வேண்டும். முழுவதையும் அடித்து விட்டு தொடக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க போகிறோம் என்பது சரியானது அல்ல. இந்த நாட்டில் மக்களுக்கு கடைசியாக இருந்த ஒரு உரிமை வாக்கு தான். அதையும் இப்போது பறிக்க பார்க்கின்றனர். இது அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் பொறுப்பற்ற செயல். ஈரோடு பொதுக்கூட்டத்தில் களத்திற்கு வராதவர்கள் குறித்து பேசவில்லை என விஜய் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், திமுகவும் மட்டுமே போட்டியிட்டது. ஆளும் பாஜவும் அங்கு போட்டியிடவில்லை. ஆண்ட அதிமுகவும் அங்கு போட்டியிடவில்லை. அப்போது களத்தில் ஏன் தமிழக வெற்றி கழகம் இல்லை. களத்தில் இல்லாதவர்கள் களத்தை பத்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலில் தவெக கொள்கை எதிரியை வீழ்த்த ஏன் அவர்கள் போட்டியிடவில்லை. இதையெல்லாம் கேட்டு சிரித்து விட்டு கடந்து செல்ல வேண்டும். 2021 தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தேன் என விஜய்யே கூறுகிறார். அரசியலில் யார் தீய சக்தி, தூய சக்தி என சலவைக்கு போட்டு, பெற்றவுடன் தெரிந்து விடும். தேர்தல் வந்தால் அனைத்து அரசியல் கட்சிகளும் தூய சக்தியாக மாறிவிடும். எனக்கு நான்கு எதிரி. என் தம்பி விஜய்க்கு ஒரே வில்லன் தான். என் தம்பி கட்சி எனக்கு போட்டியல்ல. என் தம்பி கட்சியை நான் தட்டித்தான் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: