- உத்திரமேரூர்
- உத்திரமேரூர் தாலுகா அலுவலகம்
- வட்ட வழங்கல் அலுவலர்
- மாலதி
- மாவட்ட பெட்கோட் சங்கம்
- ஜெயராமன்
உத்திரமேரூர், டிச.20: உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது. உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். மாவட்ட பெட்காட் சங்க செயலாளர் ஜெயராமன், நந்தன் முன்னிலை வகித்தனர். தனி வருவாய் ஆய்வாளர் மோகன்தாஸ் வரவேற்றார். கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கழிவறை வசதி, காற்று நிரப்பும் கருவி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கட்டாயம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வட்ட அளவிலான மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்திற்கு எரிவாயு விநியோகத்தினர் மற்றும் பெட்ரோல் பங்க் பொறுப்பாளர்கள் கட்டாயம் பங்கேற்று நுகர்வோர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வழிவகை செய்திட வேண்டும். மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்தவர்களுக்கு புதிய காஸ் இணைப்பு வழங்குவது, காஸ் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், எரிவாயு நுகர்வோர்கள் மற்றும் காஸ், பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
