×

ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (20ம்தேதி) ஆவடி சத்தியமூர்த்திநகர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. முகாமில் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளனர்.

8, 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், நர்சிங் படித்தவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அனுமதி இலவசம். இதனால் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள வேலை நாடும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Tags : Avadi Government Secondary School ,THIRUVALLUR ,THIRUVALLUR DISTRICT COLLECTOR ,Pradab ,Thiruvallur District Administration ,District Employment and Vocational Guidance Centre ,Avadi Sathyamurthinagar Government High School ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வரைவு...