- நாகேந்திரன்
- பெரம்பூர்
- தம்பிதுரை
- தமிழரன்
- தொகுதி
- வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், சென்னை
- தமிழழகன்
- பாளையம்
- ஆம்ஸ்ட்ராங்
பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்திநகர் 7வது பிளாக்கில் வசித்து வருபவர் தமிழரன் என்ற தம்பிதுரை (40). இவரது தம்பி தமிழழகன் (39) சரித்திர பதிவேடு ரவுடியான இவர்கள் இருவரும் பிரபல ரவுடி நாகேந்திரனின் அக்கா பாளையத்தின் மகன்கள். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு நாகேந்திரன் உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனை செய்தபோது 51 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நாகேந்திரனின் உறவினர்களான தமிழரசன் மற்றும் தமிழழகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். அதன்பின் ஜாமீனில் இருவரும் வெளியில் வந்தனர். இவர்கள் இருவரும் நாகேந்திரனின் பெயரை சொல்லி வியாசர்பாடி பகுதியில் மாமூல் வசூலிப்பதாகவும், வியாபாரிகளை மிரட்டுவதாகவும் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி பறிமுதல செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
* மற்றொரு சம்பவம்
ஓட்டேரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட நியூ பேரன்ஸ் சாலை பகுதியில் பொதுமக்களை ரவுடி ஒருவர் மிரட்டுவதாக ஓட்டேரி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரகளையில் ஈடுபட்ட ஓட்டேரி நியூபேரன்ஸ் சாலை பகுதியை சேர்ந்த அருண் என்ற அப்பு (35) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
