மதுரை : திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை. எழுத்துப்பூர்வ வாதங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
