- Chaturagiri
- வத்திராயிருபு
- சாதுரகிரி கோயில்
- சதுரகிரி சுந்தர மாகலிங்கம் கோயில்
- சப்தூர், மதுரை மாவட்டம்
வத்திராயிருப்பு: அதிகாலை சாரல் மழை பெய்ததால், சதுரகிரி கோயிலுக்கு பிரதோஷ வழிபாட்டிற்காக குவிந்த பக்தர்கள் 2 மணிநேர தாமதத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தற்போது தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மலைப்பகுதியில் கனமழை பெய்யும் நேரங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும். நேற்று அதிகாலை 4 மணி முதல் சதுரகிரி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. காலை 7.30 மணிவரை மழை நீடித்தது. மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர்.
ஆனால், சாரல் மழை காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை முதலில் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர், மழை நின்றதால் காலை 8 மணிக்கு பிறகு பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.
