கிருஷ்ணகிரி, டிச.18: மார்கழி மாதம் துவங்கிய நிலையில், பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகாலையில், பனியால் நடை பயிற்சி செல்பவர்கள், நோயாளிகள் மற்றும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்பவர்கள் என பலரும், வெளியில் வர முடியாமல், காலை 8 மணிக்கு மேல் தான் வீடுகளில் இருந்து வெளியே வருகின்றனர். அதே போல், சாலையோரங்களில் பனி மற்றும் குளிருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் டிரைவர்கள், லாரி கிளீனர்கள் என பலரும் குளிருக்கு நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர். பனி மற்றும் குளிரால் சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனைகளுக்கு சென்று மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும், ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் போச்சம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கடும் குளிர் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்ைக பாதிக்கப்பட்டுள்ளது.
