×

ஆலைக்கரும்பு அறுவடை தீவிரம்

இடைப்பாடி, டிச.18: இடைப்பாடி அருகே அரசிராமணி, மூலப்பாதை, குள்ளம்பட்டி, செட்டிபட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் ஆலைகரும்புகள் செழித்து வளர்ந்த நிலையில், அறுவடை பணி தொடங்கியுள்ளது. தொழிலாளர்கள் சோகைகளை பிரித்து, ஆலைக்கரும்புகளை கட்டுகளாக கட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிபாளையத்தில் உள்ள கரும்பு அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்காக, லாரியில் ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆலை கரும்புகளை சர்க்கரை மற்றும் குண்டு வெல்லம் தயாரிக்க கரும்பாலைகளுக்கும், சர்க்கரை தயாரிக்க கூட்டுறவு மில்லுக்கும் அனுப்பி வருகிறோம். இப்பகுதியில் இருந்து தினமும் 100 டன்னுக்கு மேல் ஆலை கரும்புகள் அனுப்பப்பட்டு வருகிறது என்றனர்.

Tags : Idappadi ,Arasiramani ,Moolapathi ,Kullampatti ,Chettipatti ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்